நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
ஐ கிளிக் செய்யுங்கள்.
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே என்றி எண்ணியிருந்த அடியேனுக்கு இன்று தான் அவரின் மற்றைய முகங்களின் அறிமுகம் கிடைத்தது.
பாரதியார் குறித்து யார் உரையாற்றினாலும் அலுக்காமல் கேட்கலாம். காரணம் புத்துணர்ச்சி தரும் புரட்சிக் கருத்துக்கள்! இந்தப் பதிவில் சினீவாசன் அவர்கள் ஆற்றிய உரையை தருகிறேன்.
முன்பு நான் கேள்விப்படாத பல தகவல்களை இவரின் உரையினூடாகக் கேட்டு மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது.
இந்த அருமையான உரையை இணையத்தில் தரவேற்றிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.
நன்கு அறியப்பட்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் சிவசங்கரி அவர்கள். எழுத்தைத் தவிர வேறு பல தளங்களிலும் இயங்கி வரும் அவரின் உரை ஒன்றை அண்மையில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.
“உன்னை அறிந்தால்” என்ற பொருளில் அமைந்த அந்த உரையின் காணொளி மற்றும் ஒலிக் கீற்றை சம ஆர்வம் உள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஒரு நகைச்சுவை எழுத்தாளராக நடிகராக அறியப்படும் கிரேசி மோகன் அவர்கள் ஒரு சொற்பொழிவாளர் இல்லை என்பது உண்மை என்றாலும் கூட அவரின் சொற்பொழிவு இது! எப்போ வருவாரோ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு பகவான் ரமணர் குறித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
சுதா சேஷய்யன் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை ஏற்கனவே இந்த வ.பூவில் இணைத்திருந்தேன். அந்த வரிசையில் இது இன்னுமொன்று.
இராமாயணத்தில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களை அவர்களின் குண இயல்புகளை, சொல்லாமல் விடுபட்ட விடயங்களை, குறிப்பால் உணர்த்தப் படுகின்றவற்றை என்று பல தளங்களில் நின்று தன் நேர்த்தியான தமிழால் உரைசெய்கின்றார் சுதா சேஷய்யன் அவர்கள்.
கேளுங்கள்… இன்புறுங்கள்…
ஒலித் தரம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் கேட்கும் இன்பத்தை நிச்சயமாக பாதிக்காது. இதனை ஆரம்பத்தில் பதிவேற்றிய அன்பர் முரளி அவர்களுக்கு நன்றி.
காசைத் தேடி கால்கள் நடக்கையில் ஓசை படாது ஓடி ஒளிந்தாள் கூட நடந்த கவிதைப் பெண்! காதல் தோல்வியில் நெஞ்சோடு தாங்கியவள் கண்ணீர் துளிகளை கவிதை வரியாக்கியவள்! தனிமையில் தவித்த போது இனிய உறவாய் இதயத்தில் நடந்தவள் இமைகள் உறங்க தமிழால் தாலாட்டியவள்! திசைகள் தோறும் தேடிப் பார்க்கிறேன் வ... .. read more..
கற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் Sunday, May 24, 2015